Friday, 22 December 2017

அமெரிக்காவில் செய்த புளியோதரையால் இந்தியாவில் கடும் பூகம்பம்


 தலைப்பு ஏதோ வெகுஜன நாளிதழ்களில் வரும் தலைப்பு  போல் இருக்கிறதா?

ஆனால் உண்மை .

நான் எப்போதுமே சொல்வேன் ,

மாமியார் மருமகள் ,கணவன் மனைவி சண்டையை ஆரம்பமாகும்  லொகேஷன்களில் மிகுந்த முக்கியத்துவம் வகிப்பது சமையலறை .

நிஜமாகவே நடந்த இந்தக் கதையைக் கேட்டால் இது 1௦௦/1௦௦ உண்மை என்று ஒத்துக்கொள்வீர்கள் .

என் நெருங்கிய தோழி ஒருவரின் தங்கை அமெரிக்க மாப்பிள்ளையைக் கலியாணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார் .

முதல் நாள் செய்த சாதம் மிஞ்சி விடவே அதை வீணாக்க மனமில்லாமல் புளியோதரை   ஆகஉருமாற்றிக்  கணவருக்குப் பரிமாறி இருக்கிறார் .


அன்று சுக்கிரன் புதன் குரு போன்ற கிரகங்கள் எங்கோ  வேறு வேலையாய்ப்  போய் விட சனி பயங்கர உக்கிரப் பார்வை பார்த்திருக்கணும் போல .

கணவருக்கும் புளியோதரைக்கும் என்ன வாய்க்கால் தகராறோ ....அது இந்த மனைவிக்குத் தெரியவில்லை .


கணவன்  இதை வைத்து அமெரிக்காவில் ஒரு குரு க்ஷேத்ரம்  செட் போட்டுவிட்டார்.

பொதுவாகப் பெண்களும் சரி ஆண்களும் சரி கல்யாணம் வரை அம்மா பேச்சைக் கேட்கமாட்டார்கள்
.ஆனால் கல்யாணம் ஆனா உடனே  ஒரு" குபீர் " பாசம் வரும் பாருங்கள் . இது என்ன மாதிரியான டிசைனோ என்று எண்ணத்தோன்றும்.

 ஒரு இருபது வருடத்திற்கும் மேலாக அம்மாவுடன் இருந்திருந்தாலும் அம்மாவுக்கு உதவியாக அடுப்பங்கரை பக்கம் எட்டிக் கூடப்  பாக்காத இவர்கள் ,கல்யாணம்  ஆனபின்னே   "எங்க  அம்மா  எங்க  அம்மா "
என்கிற அலப்பறை ஓவராக இருக்கும்.

இதே போல்  இந்தப் பெண்ணும் எங்க வீட்டிலே இப்படித்தான் என்று பாட

இந்தப் பையனோ  எங்க வீட்டிலே எல்லாம் பழசெல்லாம் சாப்பிடவே மாட்டோம் என்று சொல்ல .....


 இது இத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை  பன்னாட்டுத்  தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி ...  இருவருமே     இதை இந்தியாவில்இருக்கும்   தத்தம் தாய்மார்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள் . (ஏனோ இந்த மேட்டர்களின் first information  ரிப்போர்ட் கள் தந்தை மார்களுக்குப் போவதில்லை ,)

பிறகென்ன இரு பெண் சம்பந்திமார்களும்  இந்த விஷயம் பற்றிக் கொதித்துக்  கொந்தளித்து   எழ .....

கிட்டத்தட்ட ஒரு பெரிய பூகம்பமே .......

ஒரு புளியோதரையால்    வாக்கு வாதங்கள்  ......பல மணி நேரங்கள்.

 ஹி    ஹி ஜியோவுக்கு நன்றி!

கடைசியில்  பெண் வீட்டில் இது வேறு   ஒன்றுமில்லை       சனிப் பெயர்ச்சியின் எபெ ஃ க்ட்  என்று  சொல்லி எண்டு கார்டு போட்டு
முடித்திருக்கிறார்கள் மேட்டரை.


அடுத்த பரபரப்பு வரை  இந்த மேட்டர் உறவினர்கள்  மற்றும்  அவலுக்கு ஏங்கும்  வெறும்  வாய்களால்  அலசப்படும் என்பதில் ஐயமில்லை .

இன்னும் புது லேப்டாப் பழக்கவரவில்லை  . ஸ்டார்ட் செய்வதிலும் கொஞ்சம் சந்தேகங்கள் உள்ளன
எனவே காமெண்ட் போடவில்லை .

Monday, 11 December 2017

கடவுளாகி விட்டஅதிர்ஷ்டப் பூனை



மனேகி நெக்கோ என்பது ஜப்பானிய அதிர்ஷ்டத்தை
வரவழைக்கும் பூனை பொம்மை ஆகும்

என்னிடம்  எனது மாணவர்கள் அளித்த  இரண்டு பொம்மைகள் உள்ளன.

ஒரு நாள் கடையில் இந்தப் பூனை விற்பனைக்கு இருப்பதைப் பார்த்த நான் ஒரு இரன்டு பொம்மைகள் வாங்கி வந்தேன் .

ஒன்றை  என் மகன் போலவே நினைத்துக் கொண்டிருக்கும்
என் மகனின் ஃ பிரண்டுக்குக்  கொடுத்தேன் .



அவனும் அதை  வாங்கிக் கொண்டுபோய் ஆபீசில் வைக்க அங்கே இருந்த ஒரு பஞ்சாபிப் பெண்மணி அந்தப் பூனை மேல் பக்தி ஆகி அதற்குப் பூ  ஊதுவத்தி முதலியவை ஏற்றிவைக்கப் பட்டு தினமும் பலராலும்(சின்ன ஆபீஸென்றாலும் ) வழிபடப் பட்டு வந்ததாம்.


 திடீரென ஒரு நாள் அந்தப் பஞ்சாபிப் பெண்மணிக்கு ஜுரம் வந்து டாக்டரிடம் போனால் அவர் அந்த ஜுரத்திற்கு "டெங்கு "என்று பெயரிட்டு நிலவேம்புக் கஷாயம் கொடுத்தது  மற்ற சிகிச்சையும் அளித்திருக்கிறார்.


உடனே அந்தப் பெண்மணி  மெர்சலாகி இந்த "டெங்கு "விற்கு பூனைதான் முழுக்கக்   காரணம் என்று நினைத்து நொந்து விட்டாளாம்.

பூனை கூட டூ  விடவேண்டியது என்றே தீர்மானித்து விட்டாளாம்.

 ஒரு வாரம் ஆபீஸ் போகாமல் முடங்கி விட்ட வாழ்க்கை .

மறுபடியும்      ஆபீஸ் போனால் ஒரு இன்ப அதிர்ச்சி .

கிடைப்பதே  கடினம் என்று நினைத்திருந்த   நோயிடாவிற்கான  டிரான்ஸ்பர் ஆர்டர்  கையில் .


ட்ரான்ஸ்பர்  கிடைக்க முக்கிய காரணமே இந்தப் பூனையால் தான் என்கிற  "தெளிவு " வந்து பூனை மீதிருந்த கோபம் போய்  பக்தி  Returns .

"டெங்கு "விற்கும் பூனைக்கும் என்ன சம்பந்தம் , கொசு வால் தானே  டெங்கு  ?
என்று மனது சமாதானமாகி  பூனைக்கு மறுபடியும்  பூ, ஊதுவத்தி ,இப்பொழுது  additional ஆக பக்தர்களுக்குப்  பிரசாதம்  வேறு வழங்கப் படுகிறது..

.
மனேகி நெக்கோ கஷ்டம் கொடுக்கலாம் ,ஆனால் கைவிட்டு விடாது என்கிற பன்ச் டயலாக் ஆபீசில்  வைரலாக ......

 இப்பொழுது ஆன்சைட் வேண்டுபவர்கள் ,ட்ரான்ஸ்பர்  வேண்டுபவர்கள் எல்லாம் பூனை இடம்தான்  வேண்டுகிறார்களாம் .

கடையில் அட்டை டப்பாவிற்குள் இருந்த பூனை தானும் கடவுளாக ஆவோம் என்று நினைத்துக் கூட்டப்ப பார்த்திருக்காது.

 குருவும் சுக்கிரனும் சேர்ந்து லுக்  விடுகிறார்கள் போலே .

மறு விஜயம்


யார் செய்த சதியோ  யாமறியோம் என்னுடைய கம்பியூட்டர் மினி  மற்றும் சாதாரண சைசு இரண்டுமே ஒரு சுப முகூர்த்த நாளில் லைட்னிங் ஸ்ட்ரைக் செய்துவிட  மொபைல் போனில் மட்டுமே பிளாக்குகளைப் படித்தேன் . அதில்  ஆட்டோ சஜஷன் வருவதால் நான் ஒன்று டைப் செய்தால் கன்னாபின்னா  என்றுவேறு     ஒன்று
 வருவதால் காமெண்ட் கூடப் போடுவதைத் தவிர்த்து வந்தேன் .

வேறு ஒன்று புதிது வாங்கலாமென்றால் என்   மூத்த மகன் என் இரண்டாவது மகன் திருமணத்திற்கு  இங்கு வரும்போது வாங்கித் தருகிறேன் . நீ பிளாக் எழுதாவிட்டால்  சுனாமி நில நடுக்கமெல்லாம் வராது என்று சொன்னதன் பேரில் பிளாக் எழுத வில்லை .
கமெண்ட் பக்கம் தலை வைத்துப் படுத்தாலும் தடா வாகிப் போனது.

எனவே  நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்பொழுது தான் பிளாக் பக்கம் வருகிறேன் .
ஒரு வழியாக இரண்டாவது மகனின் திருமணமும் நவம்பர் 3௦ ம் தேதி நல்ல மழையாக இருந்தாலும் சிறப்பாக நடந்து முடிந்தது .
புது மாதிரியான லாப் டாப் .
external கீ போர்ட் இல்லாமல் மவுசு இல்லாமல் டைப் செய்வது கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.

பழக கொஞ்சம் டயம் பிடிக்கும் போல .
இனிமேல் தான்  பிளாக் எழுதணும்.