Thursday, 1 December 2016

பழைய உபகரணங்களின் புதிய வடிவம்



  என்னைப் பொறுத்த வரை இதுதான் இதன் முடிவு , இதன் பிறகு இதில் இம்புரூவ் செய்ய இயலாது என்பதே இல்லை ,  நன்கு யோசித்தால் தொடந்து அதில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரலாம் .
இதைத்  தான் ஜப்பானியர்கள் "காய்சென்" ( Kaizen  meaning continuous improvement )  என்கிறார்கள் .

உதாரணம்  என் அம்மா காலத்தில்கறிகாய்களைத் திருத்துவது 
( அரிந்து வைப்பது  ) என்பது
 ஒரு சாதாரணமான அரிவாள்மனையினால் தான் ,  .

 நான்  போர்டுடன்  கத்தியும் அட்டாச் பண்ணிய கட்டர் உபயோகிக்கிறேன் .
டிவியில் வரும் கட்டரும் வைத்திருக்கிறேன் (,அது கழுவுவதற்குக் கஷ்டமாக இருப்பதால் உபயோகிப்பதில்லை.)
 கடைக்குப் போனால் ஏகப்பட்ட தினுசுகள் .

 அதே போல் என்னைக் கவர்ந்த மிளகும் உப்பும் கொட்டிவைக்கும் சிறிய டப்பாக்களில் புது மாதிரியான ஷேப்பில் இருந்தன .

 நிஜமாகவே அழகாக இருந்தன . மாறுதலான வடிவம் கண்ணுக்கு விருந்து மட்டுமல்ல , மனதிலும் ஒரு புத்துணர்ச்சி தரும் .

 நெட்டில்  ஆன்லைனில் தான் கிடைக்கிறது .







 அதே போல பாத்திரம் தேய்க்கும் நார் ,பிறகு பிரஷ் ,ஸ்பாஞ்சு ,இரும்பு ஸ்பாஞ்சு  இனிமே      வேற  என்ன பண்ண முடியும் என்று நினைத்தால் U   வடிவ      ஸ்பாஞ்சு  . தட்டுகள் மற்றும் கப்புகள் போன்ற மெல்லிய விளிம்புகள் உள்ள பாத்திரங்களைத் தேய்க்க உபாயயோகமா இருக்கும் போல . இங்கே கடையில் தேடித் பாத்தேன் கிடைக்கலை .  வேண்டுமென்பவர்கள் ஆன்லயனில் வாங்கிக் கொள்ளலாம் .





நாம     தான்  உருப்படியா  ஒண்ணும் பண்ணாம  இருக்கோமோன்னு  தோணுது .


10 comments:

  1. புதுசுதான். டீவியில் காட்டும் காய்கறிக கட்டர் வாங்கினால் சீக்கிரமே அதன் பிளேடுகள் உடைந்து உபயோகமில்லாமல் போகின்றன!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  3. Replies
    1. வருகைக்கு நன்றி
      ஏன் நீங்கள் இப்பொழுது எழுதுவதில்லையா? எழுதவும். இது மனதைப் புத்துணர்வோடு வைக்கும் ஒரு உத்தி.

      Delete
  4. உப்பு, மிளகு container நன்றாக இருக்கிறது!

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  6. ஆமாம் அருணா ஆன்லைனில்தான் கிடைக்கிறது...நானும் இது போன்று அவ்வப்போது பார்ப்பதுண்டு. விண்டோ ஷாப்பிங்க் போல...சில பொருட்கள் வாங்கப் பிடித்தாலும் வாங்குவதெல்லாம் இல்லை. ரசிப்பது மட்டுமே...அவை எங்கு கிடைக்கின்றன என்பது தெரிந்தால் பார்த்துக் குறித்து வைத்துக் கொண்டு அந்தக் கடையில் சென்று வாங்கும் எண்ணம் இருந்தால் வாங்குவதுண்டு. அப்படி மாஸ்ட்ரோ எலக்ட்ரிக் ஸ்டீம் குக்கர் வாங்கியதுண்டு. எண்ணை இல்லாமல் செய்வதற்கு நன்றாக இருக்கிறது. அது ஒரு இடத்தில் மட்டுமே கிடைக்கிறது. நுங்கம்பாக்கத்தில்..அவர்கள் யூனிட்ட் ஒன்று உள்ளது அதில் மட்டுமே கிடைக்கிறது.

    கீதா

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு. நல்ல யோசனை.

    ReplyDelete