Thursday, 1 December 2016

பழைய உபகரணங்களின் புதிய வடிவம்



  என்னைப் பொறுத்த வரை இதுதான் இதன் முடிவு , இதன் பிறகு இதில் இம்புரூவ் செய்ய இயலாது என்பதே இல்லை ,  நன்கு யோசித்தால் தொடந்து அதில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரலாம் .
இதைத்  தான் ஜப்பானியர்கள் "காய்சென்" ( Kaizen  meaning continuous improvement )  என்கிறார்கள் .

உதாரணம்  என் அம்மா காலத்தில்கறிகாய்களைத் திருத்துவது 
( அரிந்து வைப்பது  ) என்பது
 ஒரு சாதாரணமான அரிவாள்மனையினால் தான் ,  .

 நான்  போர்டுடன்  கத்தியும் அட்டாச் பண்ணிய கட்டர் உபயோகிக்கிறேன் .
டிவியில் வரும் கட்டரும் வைத்திருக்கிறேன் (,அது கழுவுவதற்குக் கஷ்டமாக இருப்பதால் உபயோகிப்பதில்லை.)
 கடைக்குப் போனால் ஏகப்பட்ட தினுசுகள் .

 அதே போல் என்னைக் கவர்ந்த மிளகும் உப்பும் கொட்டிவைக்கும் சிறிய டப்பாக்களில் புது மாதிரியான ஷேப்பில் இருந்தன .

 நிஜமாகவே அழகாக இருந்தன . மாறுதலான வடிவம் கண்ணுக்கு விருந்து மட்டுமல்ல , மனதிலும் ஒரு புத்துணர்ச்சி தரும் .

 நெட்டில்  ஆன்லைனில் தான் கிடைக்கிறது .







 அதே போல பாத்திரம் தேய்க்கும் நார் ,பிறகு பிரஷ் ,ஸ்பாஞ்சு ,இரும்பு ஸ்பாஞ்சு  இனிமே      வேற  என்ன பண்ண முடியும் என்று நினைத்தால் U   வடிவ      ஸ்பாஞ்சு  . தட்டுகள் மற்றும் கப்புகள் போன்ற மெல்லிய விளிம்புகள் உள்ள பாத்திரங்களைத் தேய்க்க உபாயயோகமா இருக்கும் போல . இங்கே கடையில் தேடித் பாத்தேன் கிடைக்கலை .  வேண்டுமென்பவர்கள் ஆன்லயனில் வாங்கிக் கொள்ளலாம் .





நாம     தான்  உருப்படியா  ஒண்ணும் பண்ணாம  இருக்கோமோன்னு  தோணுது .