பழைய காலத்தில் எல்லாம் ஒரு வீட்டுத் திருமணத்திற்குக் கணவன் மனைவி இருவரும் போனால் அவர்கள் வீட்டு வைபவத்திற்கு எதிர் மரியாதை கொடுக்கும் விதமாக இவர்களும் தம்பதி சகிதமாகப் போய் வருவார்கள் .
மொய்ப் பணத்திலும் அதே மாதிரியான ஃ பார்முலா தான் .
ஆனால் இவை எழுதப்படாத சட்டம்.
இன்றைய இளம் வயதினரின்
கலாச்சாரமும் கிட்டத்தட்ட அதே மாதிரித்தான்.
ஆனால் அது ஃ பேஸ் புக் லைக் போட மற்றும் பிறந்த வாழ்த்துக்களுக்கு இந்த ரூல் ஃ பாலோ பண்ணுகிறார்கள் .
சொல்லப்போனால் வாழ்க்கையே ஃ பேஸ் புக்கிற்கு மட்டுமேஎன்றே சுருக்கி விட்ட தலைமுறை இந்தத் தலைமுறை என்று கூடச் சொல்லலாம்.
என் உறவினர் மகளுக்கு வங்கிப் பரிக்ஷை எழுத உபயோகப்படும் சில லிங்கு களை நான் இ-மெயில் மூலம் அனுப்பினேன் .
அந்த லிங்குகள் வந்தன ,நன்றி என்ற ஒரு பதில் இ-மெயிலோ அல்லது அந்த லிங்குகள் உபயோகமாக இருந்தனவா என்பது பற்றிய தகவல் இதுவரை இல்லை .
ஆனால் செம காமெடி என்னவென்றால்அந்தப் பொண்ணு மிகச் சம்பிரதாயமாக என் ஃ பேஸ் புக் போஸ்டிங்குகளுக்கு அனுதினமும் மறவாமல் லைக் போடுகிறது .
ஃ பேஸ் புக் கை ஓதாமல் ஒரு நாளும் இருக்காத தலைமுறையின் குணாதிசயங்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.