ஆன்மிகம்
பதிவு என்று எழுத
வந்த பின் நாம வெரைட்டி
ஆனா மேட்டர்களில் எழுதணும்
.
அதே சமயம் மத்தவங்க அணுகுமுறையிலிருந்து வேறு பட்டு இருக்கிறது
முக்கியம் அப்படின்னு நினைக்கிறேன்.
ஆன்மிகம்
பத்தி பத்திரிகைகளில் எழுதியுள்ளேன் .
ஆனால் பதிவில் இது வரை எழுதியதில்லை
.
நமது வாழ்க்கையில் ஆன்மிகம்
கடவுள் மற்றும் இவற்றின் தொடர்பு என்ன
என்பது பற்றிய
ஒரு தெளிவு எனக்கு இன்னும்
இல்லை ..
மன முதிர்ச்சி இல்லையா என்றும் புரியவில்லை
நான் சாமி கும்பிடும்
டைப்பு என்றாலும் ஆபிஸ் வேலை
வீட்டு
வேலை
என்பவற்றை ஓரம்
கட்டிவிட்டு சாமி
கும்பிடும் டைப்பு
இல்லை .
அந்த வேலை
செய்யும் போதே சாமி பாடல்களை
சொல்லிவிட்டு சாமியிடம் நான்
கும்பிட்டு விட்டதாக டிக்
அடிக்கச்
சொல்லிவிடுவேன் .
சாமி ஒழுங்காக
டிக் அடிக்கிறாரா தெரியவில்லை
.
தூரத்தில் உள்ள கோயில்களுக்குப்
போகும்
வழக்கம்
கிடையாது.
ஏனெனில் எனக்கு
ரோடு
கிராஸ் பண்ணுவது விளக்கெண்ணை சாப்பிடுவது
மாதிரி .
சென்ற ஞாயிறு அன்று என் மாணவி ஒருவருடன் கு
றுங்காலீஸ்வரர் கோயில்
( கோயம்பேடு) சென்றிருந்தேன்.
புரிந்த
உண்மை இதுதான் .
என்னதான்
ஆதித்யா
சானல்
சிரிப்பொலி
சானல்
போன்றவைகள் இருந்தாலும் மக்களால் மகிழ்ச்சி யோடு இருக்க முடியவில்லை.
அவ்வளவு
பிரச்னைகள் என்பதை
அங்கு வந்த மக்கள்
கூட்டம் சொல்லாமல்
சொல்லியது.
கொஞ்சம்
முன்னாடியே
சென்றுவிட்டோம்
.
நாலரை மணி
ஆகவில்லை யாதலால் (அங்கு நாலரை முதல் மணி வரை விசேஷம் ) பக்கத்தில் உள்ள
சிவன்
கோயிலுக்குப்
போனோம் .
அங்கு மக்கள் “நமசிவாய” என்ற மந்திரத்தை 108 முறை
எழுதும் பேப்பரை வாங்கி ஏதோ போட்டிக்கு எழுதுவது போலே எழுதிக் கொண்டிருந்தனர்.
கு றுங்காலீஸ்வரர் கோயிலில் திரு விளக்கு பூஜை போல
!
.நிறையப்
பெண்கள் வாழை
இல்லை மீது குத்து விளக்கு
வைத்து பூஜை செய்து கொண்டிருந்தனர்.
நாங்கள்
சாமி கும்பிட்டு விட்டு வந்த பின்
,
ஒரு இடத்தில்
அவர்களே நமது வேண்டுதல்
என்னவோ அதை ஒரு சீட்டில்
எழுதித் தருமாறு
சொல்கிறார்கள் .
நான் எழுதலாமா
வேண்டாமா
என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே
நான் வெட்டியாக இருக்கேன் என்று நினைத்தாரோ என்னவோ
தெரியவில்லை ஒரு
பெண்மணி என்னருகே வந்து,ஒரு சீட்டை என்னிடம்
கொடுத்து கொஞ்சம் எழுதித் தருகிறீர்களா
என்றார்.
அவர் சொன்னதை எழுதித் தந்தேன்
.
பிறகு நானும் என் வேண்டுதலை
எழுதிக் கொடுத்தேன் .
மற்றவர்கள் என்ன
எழுதுகிறார்கள் என்று ஒரு
ரவுண்டு போய்ப் பார்த்தேன்.
பரீட்சையில் காப்பி அடித்துப் பழகியதில்லை என்றாலும் வெகு சீக்கிரம்
மேட்டர் என்னவாக இருக்கு
என்று ஒரு
லுக்கில் புரிந்துகொண்டேன்.
குறைந்தது
30% பெண்கள்
தன் கணவன் திருந்தவேண்டும்
கணவனுக்கு நல்ல புத்தி வர
வேண்டும் போன்ற பல சாலன்ஜிங் சவால்களை
சரபேச்வரருக்கு வேலை யாகக் கொடுத்தனர்.
பத்திரிகை ஜோக்குகளிலும் பதிவுலகத்திலும் மட்டுமே மனைவிகள்
கணவர்களைக் கொடுமைப் படுத்துவது போன்ற ஒரு இமேஜு உலாத்திக்
கொண்டிருக்கிறது.
நிஜவுலகத்தில் அப்படியே
உல்டா !
டி.வி யில்
சில சானல்களில் தினமும் நிலம்
வாங்குங்க என்று கூவிக்
கூவி அழைக்கிறார்கள் .
அந்த அழைப்பினால் கவரப்பட்டு (.ஏமாந்து...?) நிலம்
வாங்கியவர்களில் ஒரு பகுதியினராவது
கடைசியாக
சரபேச்வரரிடம் வந்து சரணடைந்து பேப்பரில் சீட்டு எழுதிக் கொடுக்கிறார்கள்
.
இதை நான் என் மாணவியினிடம் சொன்னேன்
.
அவரோ மேடம்
நீங்க இன்னொன்னு கவனிச்சீங்களா ?
இவங்க கொடுத்த சீட்டு பின்
பக்கம் சாமி படிக்காம வுட்ருவாரோன்னு நெனச்சிகிட்டு ஜாக்கிரதையா பக்க
முடிவில் வலது சைடில்
சில பேர் P.T.O ல்லாம் போட்டு எழுதறாங்க
என்றார் !
முதலில் சிரிப்பு வந்தாலும்
அவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு என்கிற உண்மையை ஒத்துக்கொண்டே ஆகணும்.
இதே போல திருச்சி அருள்மிகு வெக்காளி
அம்மன் கோயிலுக்குப் போன போது
ஒரு மனிதர் பாவம்
தன் கஷ்டங்களை எல்லாம்
நாலஞ்சு பக்கத்துக்கு
எழுதி
ஸ்டேப்ளர் பின்
போட்டு
அதைக்
கலெக்ஷன் பண்ணுகிறவரிடம்
கொடுத்தாராம்
.
மற்ற யாராவது நம்மை சாமிக்கு லெட்டர் எழுதித் தரச்சொல்லி
சொல்லும் போது காமெடி மேட்டர்
ரொம்பவே இருக்கும்.
சில பேருக்கு நாம் வேண்டுதல் விண்ணப்பம்
எழுதித் தரும்போது மனுஷங்களுக்கு லெட்டர் எழுதும்போது
எழுதற மாதிரி அன்புள்ள
.......... கடவுளுக்கு என்றெல்லாம்
எழுதச் சொல்வாங்க !
இன்னும் சில பேர் பாயிண்ட் பாயிண்ட்டா நம்பரெல்லாம்
போட்டு எழுதச் சொல்வாங்க!
ஒரு சிலர் அடிக்கோடு (underline ) போடுமாறு கூட சொல்வார்கள்.
எவ்வளவு சீக்கிரம் முடிக்க
முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்குமாறு
கடவுளுக்கு ஒரு ரிக்வெஸ்ட்
கொடுப்பார்கள் .
ஏதோ எழுதினேன் என்றில்லாமல்
.............. கூட இதில்
அடக்கம்
அடுத்தவர்களுக்கு என்னும் போது காமெடியாத்தான் இருக்கு!
தலை வலியும் காச்சலும் தனக்கு
வரும்போதுதான் ..........வேற விதமா இருக்கு
.
ம்ஹூம்
.... கடவுளின் ரோல் அவ்வளவா
புரியல!
சொல்லப்
போனால் கடவுள் என்பவரை நாம் எல்லோருமே நாம்
கேட்டதைக் கொடுப்பவர் ,
இன்னும்
சரியாகச் சொன்னால் நமது ஆசைகளை நிறைவேற்றும்
கடமை அவருக்கு உண்டு .என்றே நினைக்கிறோம்.
அதைச் சரியாகவும் சீக்கிரமும் செய்யும் பட்சத்தில் இன்சென்டிவ் போனஸ் போன்றவை
அவருக்கு proportionate
to performance ஆகவும் நாம் எதிர்
மொய்
எழுதும் பாணியில் செய்கிறோம் என்பதுதான் எனக்குப் புரிகிறது.
performance சரியில்லாதபோது கார்பொரட் பாணியில் சொல்வதானால்
Pinkசீட் கொடுக்கிறோம்.
இப்படித்தான் ஓர்
நாள் என்
மாணவி ஒருவரிடம்
என் உடல்நிலை செய்துகொண்ட ஆப்பரேஷன்கள் பற்றி பேசும்போது நான் கடந்து வந்த பாதை
என்பது ராஜ
வீதியாக இல்லாமல் கற்களும் முட்களும்
நிறைந்த பாதையாக இருந்தது,
கடவுள்
ரொம்பவே கஷ்டங்களை எல்லாம் கொடுத்தார் என்றேல்லாம்
விலா
வாரியாக நெஞ்சில் உணர்ச்சி பொங்க கேட்பவர் மனம் உருக பழைய அழுகாச்சி சினிமா மாதிரி சொல்லிக்கிட்டு இருந்தப்போ
அவர் ரஜனிகாந்த் ஸ்டைலில்
"மேடம்
கவலைப்படாதீங்க .
கடவுள் நல்லவங்களுக்கு மட்டும்தான் பரீக்ஷை வைப்பார்
பிறகு எல்லாம் நல்ல படியாக
முடித்து வைப்பார் .
இதை எல்லாம் நீங்க ஒரு
டெஸ்ட் மாதிரின்னு நெனச்சுக் கோங்க "என்றார் ..
இது என்ன கடவுள் எனக்கு
நல்ல ஒரு ஹை போஸ்ட்
குடுக்க என்ட்ரன்ஸ் எக்சாமா வைக்கிறார் .என்றேன்
கடவுளின்
பக்திப் பாடல்களை நான் உச்சரிக்கிறேன் .
ஆனாலும்
என்னால்
கடவுளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதுதான் உணர்தற்கு அரியன் என்பதோ ?