Friday, 27 July 2018

குழிப்பணியாரச் சட்டியில் போண்டா




எனக்கு இந்த எண்ணெய் பண்டங்களான வடை பஜ்ஜி இதெல்லாம் சுத்தமாப் பிடிக்காது என்னும் இனத்தைச் சேர்ந்தவள் அல்ல ,
ஆனாலும் இவற்றையெல்லாம் ஒதுக்கி விடுவேன் .
காரணம் அதன் பின் வரும் வயிற்று வலி தான் . 
பிரச்னை என்றால் தீர்வும் இருக்கத்தானே வேணும் என்று யோசித்தபின் குழிப்பணியாரச் சட்டியில் போண்டா  போட்டால் எப்படி ?
தீவிரமாகச் செயலில் இறங்கினேன் 

ப்ராஜெக்ட் செம்ம  சக்ஸஸ் ..

செய்முறை இதோ:
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு          2 வேகவைத்தது
பட்டாணி                 ஒரு சின்ன கப் வேகவைத்தது
காரட் துருவல்            கொஞ்சம்
சோயா நக்கெட்           ஒரு சின்ன கப்
பச்சை மிளகாய்           காரத்திற்கேற்ப
பச்சைக் கொத்தமல்லி     கொஞ்சம்
உப்பு                      தேவைக்கேற்ப

 மற்றபடி பீன்ஸ் காலி பிளவர் யோக்ய பிளவர் என எது வேண்டுமென்றாலும் சேர்த்துக் கொள்ளுங்கள் . 




நான்   இதுவே முதல் முறை என்பதால்  காய்களின் எண்ணிக்கை மற்றும் அளவிலும்    குறைவாகவே  எடுத்துக் கொண்டேன் ,

 பிறகு பட்டாணி தவிர மற்ற எல்லாவற்றையும்  நன்கு மசித்ததுக்கொள்ளவும்.


பிறகு   பச்சைப் பட்டாணியையும் சேர்த்துக்   கைகளில் எண்ணை தடவிக்கொண்டு   உருண்டைகளாக உருட்டவும் .


பிறகு குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்தது சூடேறியதும்  குழிகளில் மிகக் குறைந்த அளவே எண்ணெய் விட்டு இந்த உருண்டைகளைப்  போட்டு நன்கு வெந்தபின்பு  திருப்பிப் போடவும் .



இரு புறமும் நன்கு வெந்தபின்பு தட்டில் போட்டு சாப்பிடலாம்.



வெளிப் பகுதி நன்கு மொறு மொறுவாகவும் உள்பகுதி  சாஃப்ட் ஆகவும் இருக்கும்.
 .
 நான் சாஸ் உடன் சாப்பிட்டேன்
சட்னி கூட இதுக்கு நல்ல கூட்டாளியாக இருக்கும் .

இதில்  எண்ணெய் செலவு மிகமிகக் கம்மி .

சீக்கிரமாகவும் வெந்து விடுகிறது.

 வடை கூட இதே பாணியில் செய்யலாமா என்று தெரியவில்லை . செய்து பார்த்த பின் பதிவிடுகிறேன் .
  டிஸ்கி:
சொந்த வேலை காரணமாக பதிவுகள் எழுதவோ ,யாருக்கும் காமெண்ட் போடவே முடியவில்லை 
இனிமேல் தான் தொடரணும்.