Wednesday, 22 February 2017

எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் ஞானிகளே


சொந்த   வேலைகள்     மற்றும்  டீச்சிங்  வேலை    கொஞ்சம் படிப்பு   என்று இருந்த படியால்  பிளாக் பக்கம் வராமலிருந்தேன் .
( பேஸ் புக் விதி விலக்கு)
 செல் போனில் பிளாக்குகள் படித்தாலும்  காமெண்ட் தமிழில் வேகமாகப் போட வரவில்லை 

வேலை   விஷயமாகக்   காரில்   பயணம்   செய்யும் போது   45 கி மீ பயணம் என்பதால்  டிரைவர்கள்   பலர் தன்    சொந்தக்    கதை  சொல்வார்கள் .

அவற்றை    வைத்தே   பல    பதிவுகள்   போடும்   அளவுக்கு   விஷயம்   இருக்கும் .

 போன  வாரம்  வந்த   டிரைவர்   தன்  மனைவி  பற்றி  ரொம்பவே  சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருந்தார் .
கோடியில் ஒரு பெண் மணி தான்  அந்த  மாதிரி  நல்ல  திறமை படைத்த   நல்ல மனம் கொண்ட ...... என்று நல்ல விதமான அட்ஜெக்ட்டிவ்  என்னவெல்லாம் உண்டோ   அத்தனையையும்   மனைவிக்கு   உண்டு   என்று   சொன்னார் .. 

குடித்தனம்   என்றால்   அவரை   மாதிரி   நடத்தவே   முடியாது   என்றார்.
அப்படி ஒரு திறமை சாலி மேடம் என்றார் .

சிக்கனத்திற்கு    டிக்ஷனரியில்   அர்த்தம்   என்னவென்றால்   என்   மனைவி பேர் தான் இருக்கும்   என்கிற   மாதிரி  அளந்து  விட்டுக்கொண்டிருந்தார் .



சொந்த வீடு இருக்கா ?-  -நான் 

ம்ஹூம் ..


 அது போகட்டும்  எப்படியெல்லாம்  திறமையாகக் குடித்தனம்  நடத்துவார்கள்   என்று   ரங்கராஜ்   பாண்டே ரேஞ்சுக்குக் கொக்கி கேள்வி    ஒன்று கேட்டேன் .

எதைன்னு    சொல்றது   மேடம் , அவங்க   செய்யறது   ஒவ்வொண்ணும்  சூப்பராக இருக்கும் 
 குறைஞ்ச  செலவில்  அருமையாச்  சமைப்பாங்க . வீணாக்க மாட்டாங்க .

 சரி  ரொம்பத் திறமையானவங்க அப்படீன்னிங்களே?
 தையல்  அது மாதிரியா  எதுவும்ன்னு ......
ம்ஹூம் .....

வேறே  கைவினைத் தொழில் ஏதாவது........?
ம்ஹூம் ..

குழந்தைகளை வளர்ப்பதில்     
ம்ஹூம் .. குழந்தையே கிடையாது .

வேறே தொழில் ஏதாவது .....?
ம்ஹூம் ..வேலைக்கெல்லாம் நான் அனுப்பமாட்டேன் .

சரி என்ன படிச்சிருக்காங்க ?

ரொம்பப் படிச்சிருக்காங்க .

( எதோ பி.   எம் என்ற நினைப்பில் நான் கேட்டேன் )

காலேஜ்ஜிக்கேல்லாம் போயிருக்காங்களா ?

 இல்லே எட்டாவது  வரையெல்லாம் படிச்சிருக்காங்க .

 நான் க்ளீன் போல்ட் .

 நீங்க என்ன படிச்சிருக்கீங்க
 ஒன்பதாவது ........


 மேலே நான்  எதுவும் கேட்கவில்லை .


 வண்டி  ஓட்டுவது ஒரு ஞானியாகவும்  நான் உட்கார்ந்திருந்த கார்    ஓர் போதிமரமாகவும் ஆன மாதிரி  ஒரு பீலிங்கு .


மன   நிறைவு என்பது  அந்த  அந்த   ஆளின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது .