குடும்ப வேலைகள் ஜாஸ்தி ஆனபடியால் பிளாக் பக்கம் வரமுடியவில்லை .
எனவே ஒரு குட்டியூண்டு ஆனால் க்யூட்டான ஒரு பதிவு.
நேற்று வழக்கம் போல் ஹி..... ஹி .... பிசியாக இருந்தபோது ஒரு போன்
வந்தது. பிரமோஷனல் அழைப்பு.
மேடம் .... நாங்கள் எங்கள் நிறுவனத்தின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும்
விதமாக மக்களிடையே சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு குறிப்பாக Future savings
(எதிர்கால சேமிப்பு ) ஏற்படுத்தும் வகையில் .......
நான் அந்தப் பெண்ணைத் தொடரவிடாமல் Future savings பற்றியா என்றேன் .
அந்தப் பெண் மிக உற்சாகம் அடைந்து ஆமா மேடம் ஆமா மேடம் என்றாள்.
சரி எனக்கு ஒரு உதவி செய்வாயா என்றேன் .
என்ன உதவி தேவை சொல்லுங்க எது வேணாலும் செய்வோம் என்றாள்.
ஒண்ணுமில்லே மேட்டர் ரொம்ப சிம்பிள் எனக்கு Future income க்கு வழி செய்து
கொடுத்தால் நான் என்Future savings சை உங்களிடம் போடுகிறேன் என்றேன் .
பதிலே பேசாமல் போனை வைத்து விட்டாள்.
நாம எப்பூடி ?