சின்ன வயதில் எங்க அப்பா
வைத்ததுதான் வீட்டில் சட்டம் .
சாப்பாட்டில்
இருந்து படிப்பு வரை .
அதை யாருமே எதிர்த்துக் கேள்வி
கேட்கமுடியாது.
நான் மட்டும் டபாய்க்கும் வழி
முறைகள் சில தெரிந்து வைத்ததினால்
சில சமயங்களில் எஸ்கேப் !
மற்றும் கடைசிக் குழந்தை என்பதால் செல்லம் வேறு.
வீட்டில்
எல்லோரும் ஒன்றாக உட்காந்து சாப்பிடணும்.
அவரோட உட்காந்து சாப்பிடுவதற்குள் போதும் போதும் ன்னு
ஆயிடும் .
கையைக்
கீழே ஊணக்கூடாது .
சாப்பிடும்
போது பேசக்கூடாது.
அதுவும்
32 உருண்டை கட்டாயம்அவங்க அவங்க கை சைசுக்கு சாப்பிடணும்
இல்லாட்டி செத்தப்புறம் சாமி சாப்பிடாமல் விட்ட
பாக்கி உருண்டைகளை கணக்கு போட்டு அதற்கு
சரிசமமான சாணி உருண்டைகளை சாப்பிடச்
சொல்வாராம் .டெய்லி மிச்சம் வெச்ச
உருண்டைகளை கியுமுலேட்டிவ் சிஸ்டமில் கணக்கு வெச்சு
தீட்டி டுவார் என்றெல்லாம் சொல்லி
கொடுமைப்படுத்திய காலம் .
திட்டவட்டமாக
32 தான் என்கிற நம்பரை எங்கே
இருந்து புடிச்சார்
உலகத்தில் இந்த மாதிரி சாப்பாடு மிச்சம் வக்கிரவங்களுக்காக சாணி ஸ்டாக்கு சாமி எப்படி மெயிண்டயின் பண்ணும் என்கிற கேள்வியெல்லாம் கேட்க நினைத்தேன் அவரிடம்
கேட்க முடியாது.அம்மாகிட்டே கேட்டேன் .
வாயை மூடிட்டு
சாப்பிடு என்கிற தப்பான லாஜிக்கோட மிரட்ட ... நான் கப் சிப்
அப்பொழுது
அவர் பாவம் எனக்கு ஒரு
மகன் பிறந்து இனிமே எந்தக்
குழந்தையையுமே 32 உருண்டை சாப்பிடச் சொல்லமுடியாத
படி ஒரு
செம ஆப்பு வெப்பான் என்று
கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க
மாட்டார்.
இந்தக் கொசுத் தொல்லை
தாங்க முடியாமல் நான் என் அம்மாவிடம்
என் அப்பா வருவதற்கு முன்பே
அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே என்று ஒரு பிச்சைக்கார
டயலாக் அடித்து அப்பா வருவதற்கு முன்னாடியே சாப்பிட்டு முடித்து அவரிடம் இருந்து தப்பித்தேன்
.
பிறகு எட்டு ஒன்பது வயதானதும்அம்மா நீங்களே பாவம் எல்லா
வேலையும் செய்யறீங்க நானே
போட்டு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று பொறுப்புள்ள பிள்ளை
மாதிரி வசனம் பேசி சுதந்திரம்
பெற்றேன் .
அந்த வயசிலேயே அந்தக் காலத்திலேயே எவ்வளவு
டிப்லோமேடிக்காக
அணுகியிருக்கிறேன் பாருங்கள் .
பிறகு எனக்கும் மகன்
பிறந்தான் .
அவனுக்கு
சாப்பாட்டு கொடுப்பதற்கும் போதும் போதும் என்று
ஆகிவிடும்.
நான் ஹைதராபாத் போனால் இப்பக்கூட
பக்கத்து வீட்டினர் என் மகனிடம் சாப்பிடுவதற்காக அவன்
படுத்திய பாட்டைச் சொல்வார்கள் .
பெரியவனுக்கு
ரெண்டேகால் வயசு இருக்கும் .
சின்னவன்
ஒரு நான்கு மாதக் குழந்தை
.
நானும்
ஆபீசு போக ஆரம்பித்து விட்டேன்.
எங்க அப்பா என் பணிப்பெண்
எல்லாருமே எனக்கு குழந்தை வளர்க்கத்
தெரியவில்லை
நீ ஆபீசு போனப்புறம் நாங்க
எப்படி அவனை சாப்பிட வெச்சு நல்லா குண்டாக ஆக்கிடறோம் பாரேன் ன்னு சவால் .
ஒரு முக்கியமான விஷயம் இந்த இடத்தில்
மத்தியான
தூக்கம் இல்லைன்னாக்க எங்க அப்பா வுக்கு
மூட் அவுட் ஆயிடும் .
என்னுடன்
அவர் வாழ்ந்த 54 வருடங்களில் அவர் மத்தியான தூக்கம் தூங்காத நாட்கள் என்றால் ஒரு
பத்து நாள் கூட இருக்காது
.
கல்யாண
வீடோ செத்த வீடோ எதுவானாலும்
உட்கார்ந்த நிலையிலேயே அரை மணி தூங்கி விடும் அசகாய சூரர்
ஒரு ரெண்டு மூணு நாள்
எல்லாம் நல்லத்தான் போயிக்கிட்டு இருந்திச்சு .
ஒரு நாள் என் மகனிடமும்
இந்த 32 உருண்டை டயலாக் மற்றும் அதன் விவரங்களை
சொல்லியிருக்கார் .
அவருக்கு
தெரியலை அன்றைய அவரின் ராசிக்கட்டத்தின் 12 கட்டத்திலிருந்தும்
குரு புதன் போன்ற சுப
கிரகங்கள் எல்லாம்
காலி பண்ணி போக சனியே
12 கட்டத்திலும் பூந்து விளையாடுகிறார் என்று.
என் மகன் 32 கணக்கு காமிக்க
பத்து அப்புறம் இருபது ஸ்டிரைட்டா முப்பது முப்பத்தி
ஒண்ணு முப்பத்தி ரெண்டு என்றெல்லாம்
ஷார்ட் கட் செய்தும் விடவில்லை
அப்பாவும் பணிப்பெண்ணும் .
சாப்பிடுடா சாமி சாணி உருண்டை குடுப்பார் என தொடர் மிரட்டல்
பையன் மசியலை
ராசிக் கட்டத்திலே
இருந்த சனி எங்க அப்பா
நாக்குக்கு
ஷிஃப்ட் ஆகி
சாப்பிடுடா
கண்ணா அப்புறம்
உனக்கு சாக்கிலேட் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள் .
நான் எட்டடி பாஞ்சா எம்புள்ள
16 இல்ல இல்ல 32 அடி பாய்வான் என்கிற வெவரம்
எங்க அப்பாக்கு கிடையாது.
அவனும்
சாப்பிட்டு விட்டு நல்ல
புள்ளயா (என்
புள்ள வேறே எப்படி இருக்குங்கிறீங்களா அதுவும்
சரிதான் )கான்ட்ராக்ட் போட்டபடி சாக்கிலேட் கேட்டு இருக்கிறான் .
ஒன்று மட்டும் குடுத்து இருக்கிறார்கள்
.
பையன்
32 சாக்கிலேட் குடு இல்லாட்டி சாமி
32 சாணி
உருண்டை குடுத்திடும் என்று சொல்லியிருக்கிறான் .
எங்க அப்பா சாப்பாடு வேறேடா சாக்கிலேட்
வேறே டா
சாக்கிலேட் சாணி உருண்டை கணக்கில்
சேராது என்று சொல்லியிருக்கிறார் .
பையன் விடவில்லை
சாப்பாட்டுக்கு ஒரு லாஜிக் சாக்கிலேட்டுக்கு
ஒரு லாஜிக்கெல்லாம் சாமி வெச்சுக்காது. என்கிற
அர்த்தத்தில்
அம்மாதான்
சாமி அந்த மாதிரி வேறுபாடெல்லாம்
பாக்காது ன்னு சொல்லியிருக்கங்க . ன்னு
லா பாயிண்டு எடுத்து வுட்டுருக்கான்
எப்படி
என் வார்த்தை யை தெய்வ வாக்காக
மேற்கோள் காட்டியிருக்கான்
பாருங்க
அதுவுமில்லாம சாணி
உருண்டை நீங்க
சாப்பிடனும்ன்னாலும் பரவாயில்ல நானில்ல சாப்பிடணும் என்று
ஒரே அழுகை ,
அடம் .
இவன் அழுததில் இரண்டாவது குழந்தையும் அழ யாருமே தூங்க
முடியவில்லை .
கிட்டத்தட்ட
இரண்டரை மணி நேரப் போராட்டம்
.
பக்கத்து
வீட்டில் உள்ளவர் முயற்சி செய்தும்
விடாமல் அதே டயலாக் அதே அழுகை
அப்புறம் மத்தியானம் 3 மணிக்கு சாமிக்கு
விளக்கு ஏற்றி வைத்து ஊதுபத்தி காமிச்சு 32 சாக்கிலேட் சாப்பிடாததற்க்கான சரிசமமான
32 சாணி உருண்டை
யை எங்க அப்பாவுக்கும் அந்த
பணிப்பெண்ணுக்கும் ஆன
சாணி உருண்டை அக்கவுண்டில்
சேர்க்கும்படியாக வேண்டிக்கொண்டு
சாமி ஓ கே சொல்லிடுச்சுடா
ன்னு சமாதானம் பண்ணி இருக்காங்க
.
சைக்கிள்
கேப்பில என் பையன் என்ன
அறிவு பாருங்க
அப்படியே
சாமிகிட்டே சாக்லேட் மட்டுமில்ல சாதம் சப்பாத்தி இட்லி
தோசை எதுக்குமே 32 வேணாம்ன்னு சொல்லிடுங்கன்னுருக்கான்.
மத்தியான தூக்கம் போன எரிச்சலில் எங்கப்பா
வெறுத்துப் போய் போடா இனிமே
32 நம்பரையே கணக்குலேருந்து எடுத்துடலாம்ன்னு சொல்லிட்டார்