Friday 30 August 2013

ஆறு மனமே ஆறு என்பதால் வந்த வினை

 யாராவது கஷ்டத்தில் இருக்கும் போது  ஆறுதலாக ரெண்டு வார்த்தை சொல்வது மனிதனாகப் பிறந்த  யாருமே செய்வது தானே என்று நினைத்து சொல்லப்  போக என்னைத் தப்பாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது?
அதுவும் நம்முடன் நெருங்கிப் பழகியவர்களே உன்னை மாதிரி ஆளை எல்லாம் ....... கொன்னா கூட பாவம் இல்லை   என்றால் எப்படி இருக்கும் ?
இந்த விஷயத்தை கேட்ட எல்லாருமே என்னைப் பார்த்து செம முறை முறைக்கிறார்கள் 
இதை நீங்களாவது  கேட்டுவிட்டு  நியாயத்தைச் சொல்லுங்கள்.


 எனது நெடு நாள் தோழி  ஒருவர் வயது ஆக ஆக மறதி  ஜாஸ்தி ஆகிறது ''ஃ .பிரிட்ஜ் கிட்டே போகிறேன் ,ஆனா எதுக்குப்போறேன்னு  மறந்து போகிறது. எதுவுமே  வெச்ச இடம் மறந்து  போகுது
  
.ஒவ்வொண்ணையும் தேடி தேடி அலுத்து போகுது என்ன பண்றதுன்னே புரியலை .யோகா பண்ணலாம்ன்னு உக்காந்தாலும் உடம்பும் நிலை கொள்ளாமல் தவிக்குது. மனசும் இஷ்டத்துக்கு ஊர ஓசியிலேயே கன்னா பின்னான்னு வளைய வருது 
புத்தி கெட்ட புருஷட னோட கூடஏதோ  காமா சோமா ன்னு கதையை ஓட்டிட்டேன்  ஆனா ஞாபக மறதியோட வாழ்றது ரொம்ப கஷ்டம்பா முடியலை  தாங்காது  ''என்ற புலம்பல் புராணம் போனில் !அவர் சாதாரண மிடில் கிளாஸ் ஃ பேமிலி 
 
இப்படி சொல்பவர்களுக்கு  ஆறுதல் சொல்லி மனதை தேற்றுவதற்காக நான் சொன்னேன்  " இதெல்லாம் கவலைப்பட வேண்டிய விஷயமே இல்லை நாட்டில் பல பேருக்கு  இருக்கு..அவ்வளோ பணம் வெச்சிட்டு இருக்கிற அம்பானிக்கு கூட இருக்கு.அவருக்கு  ஞாபக மறதின்னாக்க எவ்வளவு கோடிக்கனக்கிலே லாஸ்  ஆகும். அதைப்பத்தி அவரும் கவலைப்படலை ,
அவர் கம்பெனியிலே பணம் போட்ட யாருமே கவலைப்படலை .ஒங்க ஞாபகமறதி யாலே யாருக்கும்  தொல்லை இல்லை நிம்மதியா இருங்கோ "

 இப்ப சொல்லுங்க  நான் சொன்னது சரிதானே! 

Tuesday 20 August 2013

தலையாய பிரசினைகள்

 கடந்த ஒரு வாரமாக பிளாகிலும் மற்ற ஊடகங்களிலும் விஜயின்  "தலைவா "படம் வருமா வராதா என்றும் காரணம் என்ன என்றும் அதனால் தயாரிப்பாளருக்கு  எவ்வளவு  நஷ்டம் விஜய் க்கு அதனால்  எவ்வளவு  பாதிப்பு என்று அக்கு வேறு ஆணி வேறாக  ஆய்வு செய்து ஊடகங்ககள்   அலசின.
கிட்டத்தட்ட இதை தமிழ் நாட்டின் தலையாய பிரச்னை ரேஞ்சுக்கு எல்லோரும் பேசினார்கள்.பல கோடி முதலீடு செய்ததால் சந்தேகமின்றி  லாபமோ நஷ்டமோ  எதுவுமே  கோடி ரேஞ்சில் தான் உலாவும்.

ஒரு சக  மனிதனுக்கு கஷ்டம் வரும்போது ஒரு மனித நேயத்துடன் அணுகியது பாராட்டத்தக்கதே.

 ஆனால் பிரச்னை என்னவென்றால்  நாட்டில் இதே போல் கஷ்டப்படுபவர்கள்  அத்தனை பேர் மீதும் இந்த கரிசனம் இல்லாதாதுதான் .
 ரூபாயின் மதிப்பு குறைந்ததால்  வெளிநாட்டிற்கு ஏற்றுமதி   செய்பவர்களுக்கு எவ்வளவு நஷ்டம், இறக்குமதி  செய்பவர்கள் எக்கச்சக்க அளவுக்கு கையை விட்டுப் போட வேண்டிய நிலைமை . வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்காக  பணம் அனுப்பும் பெற்றோர்கள் அதனால் எவ்வளவு பாதிப்படைவார்கள்  ? 
ரூபாய்   மதிப்பு  வீழ்ச்சி  அடைந்தது என்ற ஒரு  பிரச்னை யால்   ஏற்றுமதியாளர்   இறக்குமதியாளர் என்ற சமுதாயத்தின் பல பேரின் நஷ்டத்தை கணக்கிட்டால் 
தலைவாவை லேட்டாக ரிலிஸ் செய்ததால் சம்பத்தப்பட்டவர்கள் அடைத்த நஷ்டத்தை  விட பலமடங்கு அதிகமாக இருக்கும். 
இது போல நாட்டில் தலையாய பிரசினைகள்  ஏராளம்.
 ஆனால் நமது மக்களின் சினிமா மோகம்  மற்ற எந்த பிரச்னையையும் பார்க்கமுடியாதபடி கண்ணை மறைத்ததுதான்  மனதுக்கு வருத்தமே தவிர சினிமாவிற்கு நான்  எதிரி அல்ல.

Sunday 11 August 2013

மனித மனம் -- ஒரு வியப்பின் எல்லை

 மனித மனம் -- ஒரு வியப்பின் எல்லை

 மன நல நிபுணர்கள் மனித மனத்தை எத்தனையோ  கோணங்களில் ஆராய்ந்து இருக்கிறார்கள்  ஆனால்  மனித மனத்தை  நான் பார்க்கும் கோணமே வேறு .

 நமக்கு முன் எத்தனையோ பேர் எத்தனையோ  தப்புகளைப் பண்ணியிருந்தாலும் திரும்ப திரும்ப அதே தப்புகளையே  மனிதன் செய்கிறான் .

சிட்  ஃ பண்டுகளில்  பணம் போட்டால் ஏமாறுவோம் என்பது தெரிந்தும்  ஏமாறும் மக்களும் குறையவில்லை  சிட்  ஃ பண்டுகளும்  குறையவில்லை .
 மக்களிடையே  படிப்பறிவு  அதிகமான போதிலும் சரி , எப்படியாகப்பட்ட  அறிவாளிகள்   நிதி மந்திரியாக வந்தாலும் சரி , இது சுத்தமாக மாறவே இல்லை ,
 குடி ,சிகரெட்  ,,பான்  போன்றவற்றால்  வாழ்க்கையைத் தொலைத்த  மனிதர்கள் பலர் என்று தெரிந்தும் ஒவ்வொரு வருடமும்  புது குடிகாரர்களும் சிகரெட் பான் போடுபவர்களும் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதுபோல் சினிமா மோகமும் அப்படியே . தனக்கு பிடித்த நடிகரின் படம் ஏதோ  காரணத்தால் பார்க்க முடியாமல் போய்  மன வருத்தத்திற்கு ஆளாவதும்  தற்கொலை வரை போவதும் இது போலவே தான் .
 வாழ்க்கையில்  இவற்றை விட முக்கியமானவைகள் எத்தனையோ உள்ளது என்பதை  படித்த நாமே  இப்படி செய்தால் என்ன சொல்வது?

Tuesday 6 August 2013

செம ஹாப்பி !

"செம ஹாப்பி"  க்கான காரணத்தை கேட்டா  உங்களுக்கு ரொம்பவே அல்பமாக தோணும் .ஆனா பல நாள் முயற்சிக்குப்பின் எனக்கும்  தமிழில் மற்றவர்களை  மாதிரி ரொம்பவே வேகமாகவே டைப் பண்ணவே வந்துவிட்டதே !; இதற்கு நான் முதலில் நன்றி சொல்லவேண்டியது திண்டுக்கல் தனபாலன்  அவர்களுக்குத்தான் .
ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் ப்ளாக் ஆரம்பித்து விட்டேனே தவிர 
முதல் ப்ளாக் டைப்  பண்ண 3 மணி நேரம் ஆச்சு !இரவு உணவை 
லேட்டாக த்தான் தயாரித்தேன்.இனியும் ஒரு ஒரு ப்ளாக் கிற்கும் 3 மணி நேரம் என்றால் உஸ் ! அப்பாடா  தலையை சுத்துதே !
.இதற்கு முன் நான் உபயோகித்துக்  கொண்டிருந்த தமிழ் சாப்ட்வேரில்  அடிக்கடி ஷிப்ட் key உபயோகிக்க  வேண்டி  இருக்கும் . நான் ஒன்றும் டைப்பிங்கில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இல்லை .குட்ஸ் வண்டி ஸ்பீட் தான் .ஆனால் இந்த  ப்ளாக் இல் உள்ள sofrware ரொம்பவே  என்னை மாதிரி நத்தை ஸ்பீட்கேசுகளுக்கு செம டைப்பிங் friendly ஆக இருக்கிறது .
தொழில் நுட்ப வளர்ச்சிக்கு கோடி x கோடி வணக்கம் .
 ஆக tool கிடைச்சாச்சு இனிமே ஸ்பீடு எடுக்கவேண்டியதுதான் பாக்கி .

எழுதுவதற்குதான்  ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கே !
குடியிருப்பது ஒரு சிறிய    பிளாட்  ஆக இருந்தாலும் காலையில் எழுந்து வாசலில் கோலம் போடும் பழக்கம் உண்டு.
"ஒரு சிலர்  ஏன் இதிலெல்லாம் டயம் வேஸ்ட் பண்ணுகிறாய்" என்பார்கள்  ..
"உங்களுக்கென்ன  தெரியும் இந்த கோலம் வீட்டிற்குள் எதிர் மறைசக்திகள் தீய சக்திகள் வராமல் தடுக்கும் "என்பேன்.

"ஏன்   எதிர் மறைசக்திகள் தீய சக்திகள் எல்லாம் வாசல் வழியாகத்தான் வருமா என்ன, ஜன்னல்  பால்கனி வழியாக வராதா என்ன ?  " 
"ஒரு கோலத்திற்கு அவ்வளவு பவர் இருந்தால் ஒரு ஒரு நாட்டிலும் கோலத்தையே நாட்டின் எல்லையின்  பார்டராக வைத்திருக்கலாமே ?"
இது போன்ற கிண்டல்கள் எவ்வளவு வந்தபோதும் நான் கோலம் போடுவதை விடவில்லை .
இது மூட நம்பிக்கை சார்ந்த விஷயமானாலும் குறைந்த பட்சம் வாசல் வழியாக வரும் தீய சக்திகளுக்கு  மட்டுமாவது  நோ என்ட்ரி போர்டு போல இருக்கட்டுமே !
எனக்கும் காலையின் மென்மையான காற்றை அனுபவிக்கும் சுகம் கிடைக்கட்டுமே !
தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை யும் பின்பற்றிய மாதிரியும் ஆச்சு!

என்ன நான் சொல்வது சரிதானே !
  


                                                           செம ஹாப்பி !
செம ஹாப்பி கான காரணத்தை கேட்டா  உங்களுக்கு ரொம்பவே அல்பமாக தோணும் .ஆனா பல நாள் முயற்சிக்குப்பின் எனக்கும்  தமிழில் மற்றவர்களை  மாதிரி ரொம்பவே வேகமாகவே டைப் பண்ணவே வந்துவிட்டதே !; இதற்கு நான் முதலில் நன்றி சொல்லவேண்டியது திண்டுக்கல் தனபாலன்  அவர்களுக்குத்தான் .
ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் ப்ளாக் ஆரம்பித்து விட்டேனே தவிர 
முதல் ப்ளாக் டைப்  பண்ண 3 மணி நேரம் ஆச்சு !இரவு உணவை 
லேட்டாக த்தான் தயாரித்தேன்.இனியும் ஒரு ஒரு ப்ளாக் கிற்கும் 3 மணி நேரம் என்றால் உஸ் ! அப்பாடா  தலையை சுத்துதே !
.இதற்கு முன் நான் உபயோகித்துக்  கொண்டிருந்த தமிழ் சாப்ட்வேரில்  அடிக்கடி ஷிப்ட் key உபயோகிக்க  வேண்டி  இருக்கும் . நான் ஒன்றும் டைப்பிங்கில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இல்லை .குட்ஸ் வண்டி ஸ்பீட் தான் .ஆனால் இந்த  ப்ளாக் இல் உள்ள sofrware ரொம்பவே  என்னை மாதிரி நத்தை ஸ்பீட்கேசுகளுக்கு செம டைப்பிங் friendly ஆக இருக்கிறது .
தொழில் நுட்ப வளர்ச்சிக்கு கோடி x கோடி வணக்கம் .
 ஆக tool கிடைச்சாச்சு இனிமே ஸ்பீடு எடுக்கவேண்டியதுதான் பாக்கி .

எழுதுவதற்குதான்  ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கே !
குடியிருப்பது ஒரு சிறிய   ஃ பிளாட்  ஆக இருந்தாலும் காலையில் எழுந்து வாசலில் கோலம் போடும் பழக்கம் உண்டு.
"ஒரு சிலர்  ஏன் இதிலெல்லாம் டயம் வேஸ்ட் பண்ணுகிறாய்" என்பார்கள்  ..
"உங்களுக்கென்ன  தெரியும் இந்த கோலம் வீட்டிற்குள் எதிர் மறைசக்திகள் தீய சக்திகள் வராமல் தடுக்கும் "என்பேன்.

"ஏன்   எதிர் மறைசக்திகள் தீய சக்திகள் எல்லாம் வாசல் வழியாகத்தான் வருமா என்ன ஜன்னல்  பால்கனி வழியாக வராதா என்ன ?  " 
"ஒரு கோலத்திற்கு அவ்வளவு பவர் இருந்தால் ஒரு ஒரு நாட்டிலும் கோலத்தையே நாட்டின் எல்லையின்  பார்டராக வைத்திருக்கலாமே ?"
இது போன்ற கிண்டல்கள் எவ்வளவு வந்தபோதும் நான் கோலம் போடுவதை விடவில்லை .
இது மூட நம்பிக்கை சார்ந்த விஷயமானாலும் குறைந்த பட்சம் வாசல் வழியாக வரும் தீய சக்திகளுக்கு  மட்டுமாவது  நோ என்ட்ரி போர்டு போல இருக்கட்டுமே !
எனக்கும் காலையின் மென்மையான காற்றை அனுபவிக்கும் சுகம் கிடைக்கட்டுமே !
தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை யும் பின்பற்றிய மாதிரியும் ஆச்சு!
என்ன நான் சொல்வது சரிதானே !


Saturday 3 August 2013

படிப்பின் முக்கியத்துவத்தையும்  அதற்கு  சரிசமமாக நேரம் பணம் ஒழுக்கம் இவற்றின்  முக்கியத்துவத்தையும் உணர்த்திய  என் பெற்றோருக்கு  எனது முதல் பிளாக் சமர்ப்பணம் .
சிறிய வயதில்  நன்கு படித்த பெற்றோ களாயிருப்பினும்  ஸ்கூலில்
 சேர்த்தார்களே தவிர  தினமும் ஸ் கூலுக்கு அனுப்பவில்லை . வீட்டில் அம்மா தமிழ் வித்வான்  மற்றும் ஆங்கிலமும்   நன்றா கப் படிததவர்  என்பதால்  பிரபலமான ஷேக்ஸ் பியர்  கதைகளும்   ஆங்கில கவிதைகளும்  தமிழில் திருக்குறள்  கம்பராமாயணம் சிலப்பதிகாரம்  ஆத்திச்சூடி  போன்றவற்றை யும் சொல்லிக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல்  என்னை சொல்லவும் வைப்பார் ..அப்பா  காலையில் 6 மணிக்கெல்லாம்  எழுப்பி கையில்  ஒரு பாட புத்தகத்தை கொடுத்து வாய் விட்டுப் படி  என்று படாத பாடு  படுத்துவார்,
 ஞாபகம்  வருதே  ஞாபகம்  வருதே  என்று  பாடும் அளவுக்கெல்லாம்
ஸ்கூலில் போய்  பரிட்சை  எழுதிய ஞாபகம்  இல்லை ,
ஆனால்  அந்தக்காலத்தில்  ( சுமார் 50 வருடங்களுக்கு முன் என் அப்பா அந்த சிறிய ஊருக்குப் பெரிய வேலையில் இருந்ததாலும்     எப்படி யோ பாஸ்  போட்டு 9 வயதில் 6வது படித்தேன் .( 6வது முதல் பெரிய ஊரான  திருச்சி  வந்து  விட்டதால் அப்பாவின் "செல்வாக்கு " என்கிற  பருப்பு வேகாது .)
  என் பெரிய அக்காவுக்கு  பரிட்சை என்றால்  வேப்பங்காய்  என்று  சொல்வதை விட வேப்ப  மரம் என்று சொல்லுமளவுக்கு வெறுப்பு .   பரிட்சை யைக்கண்டு புடிச்சவனை  தேடிக்கண்டு புடிச்சு  ஒதைக்கணும்  அவனை  குத்தி கொலை பண்ண ணும்  என்று  ரண கள டயாலாக்  அடிக்கடி அடிப்பதுண்டு.
பரிட்சை என்றால் கிலோவா  லிட்டரா என்று தெரியாத எனக்கு எதுவும் புரிபடவில்லை. எனக்கும்  என்  அக்காவுக்கும் 8 வயது வித்தியாசம்  என்பதால் அக்காவின்  இந்த  தீவிரவாத  அறிக்கைகளால் அந்த  8 வயதில்  ரொம்பவே
அரண்டு போனதென்னவோ  நிஜம் ..
பயத்தி ல் ஒரு நாள்  என் அம்மா விடம் " ஏம்மா  இந்த படிப்பு  பரிட்சை இதுக்கெல்லாம் பின்னாடி இவ்வள்வு கஷ்ட ம இருக்கா  "என்று  கேட்ட போது
என்  அம்மா  ச்சே  ச்சே படிப்பாலே  எவ்வளவோ  கஷ்டத்தை  மறக்கலாம் என்றும்  மணமாகி 6 ஆண்டுகள்  கழித்து  தான்  பெற்ற தனது  முதல்  மகன் 16 நாளில்  இறந்த துக்கத்தை  மறக்க  தமிழ் வித்வான்   படிப்பு படிக்க ஆரம்பித்ததாகவும் இதோ  பாரு   கம்பராமாயண பாட்டெல்லாம்  மனப்பாடம்
 பண்ண  கவலை எல்லாம் போச்சு  என்று  சொன்னதை மனதின் ஒரு மூலையில்  எங்கோ ஸ்டோர்  பண்ணி வைத்தேன் ,
 ஆனாலும் மேலே  M .A  படிப்பு  வரை  பரிட்சை   என்றால் பயமில்லை ,அதே சமயம் வெறுப்பும் இல்லை .பிறகு  வ.ங்கி  வேலைக்கு  வந்து அக்கவுண்டன்சி
 ரொம்பவே இஷ்டப்பட்டு படித்தேன் .
காலப்போக்கில்  தாயும் இறக்க ,  இரண்டு  மகன்கள் பிறந்த பின் ஆஸ்துமா  நோய் வந்து  asthma has  no reason  no reason  என்பது போல் கிட்டத்தட்ட எல்லா நாளுமே இரவுகளில் ஆஸ்பத்திரி விஜயம் . இந்த டயம் டேபிள் ஒரு ஒருவருட காலம் ஓட  உடல் தெம்பு  மனத்தெம்பு எல்லாம் இரண்டு வருடம் முன்பு  இரண்டு  all time low க்குப்  போன ஷேர்  மார்கெட்  மாதிரி down  ஆச்சு.
 என்ன பண்ணுவது என்றே  புரியாமல்  விழித்துக்கொண்டிருந்த  போது
 மண்டையில் ஒரு 1000 வாட் பல்பு  எந்த ச்விட்சும் போடாமல்  ப்ளாஷ்   !!1
 25 வருடம் முன்பு அம்மா  சொன்னதை  மெமரியில்  இருந்து  retrieve
 பண்ணியது  என் குழந்தை கள்  செய்த புண்ணியம்  கல்யாணத்திற்கு முன்பு பாதியில் விட்ட CAIIB    பரிட்சையை  6 வருடம் கழித்து எழுதி பாஸ் பண்ணினேன் , ஆஸ்துமா  நோய்  மெல்ல மெல்ல  குறை.ந்தது .
அப்பொழுதுதான்  புரிந்தது  படிப்பிற்கும் பரிட்சைக்கும்  நோய் தீர்க்கும் வல்லமை  உண்டு என்பது .
 இதே போல்  12 வருடம் முன்பு  வங்கி வேலையிலிருந்து  குடும்ப சூழ்நிலையின்  கட்டாயத்தால்  விருப்ப ஓய்வு  பெற்ற  போதும் திசை காட்டியாக  இருந்தது  எனது  அம்மாவின்  சொற்களே !
 பிறகு வேற்று  நாட்டு மொழி பயின்று  இன்றும் என்னை ஏதோ  சிறு  சிறு  வேலைகளில்  ஏடுபடுத்திக்கொள்வதற்கும்  ஒரு சிலர்க்கு   inspirational person ஆக இருப்பதற்கும்     காரணமான என் பெற்றோர்களுக்கு இந்த பிளாக்   சமர்ப்பணம் .